Ticker

8/recent/ticker-posts

𝗣𝗟𝗘𝗔𝗦𝗘 𝗦𝗨𝗕𝗦𝗖𝗥𝗜𝗕𝗘 𝗢𝗨𝗥 𝗖𝗛𝗔𝗡𝗡𝗘𝗟

ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கோவை காவலர் பணியிடை நீக்கம்.

ஓடும் ரயிலில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


www.vaanavilmedia.in

 கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சேக் முகமத், பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்றுவிட்டு கடந்த சனிகிழமையின்று சென்னையிலிருந்து கோவைக்கு வரும் இன்டர்சிட்டி ரயிலில் வந்துள்ளார்.

அன்று அதே ரயிலில் இவரது அருகில் சென்னையில் உள்ள கல்லூரியில் பயிலும் கோவையை சேர்ந்த மாணவி கோவைக்கு பயணித்துள்ளார். அப்போது அந்த ரயில் காட்பாடி அருகே வந்துகொண்டிருந்த போது அருகே அமர்ந்திருந்த காவலர் சேக் முகமது அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பதுள்ளார்.

 இதனால் அதிர்சசியடைந்த மாணவி தனது செல்போனில் அதை வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் இது குறித்து அந்த மாணவி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தந்துள்ளார்.

 புகாரைத் தொடர்ந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவரைக் காவல்துறையினர் ரயிலிருந்து இறக்கி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் புகார் மீது காவல்துறையினர் வழக்கப் பதிவு செய்துள்ளனர்.

 இந்த நிலையில் மாணவியிடம் அத்து மீறலில் ஈடுபட்ட கோவை ஆர். எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சேக் முகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments