Ticker

8/recent/ticker-posts

𝗣𝗟𝗘𝗔𝗦𝗘 𝗦𝗨𝗕𝗦𝗖𝗥𝗜𝗕𝗘 𝗢𝗨𝗥 𝗖𝗛𝗔𝗡𝗡𝗘𝗟

குறிச்சி குளக்கரையில் கோர விபத்து! கல்லூரி மாணவர் பலி;

குறிச்சி குளக்கரையில் கோர விபத்து! கல்லூரி மாணவர் பலி; மற்றொருவருக்குத் தீவிர சிகிச்சை.


கோவை குறிச்சி குளக்கரையில் திருவள்ளுவர் சிலை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

 மற்றொரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது முத்து பாலாஜி இந்த விபத்தில் உயிரிழந்ததாகவும், குன்னூரைச் சேர்ந்த 19 வயது சூர்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பான சாலையில் நிகழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு.

பரபரப்பாக இயங்கி வரும் குறிஞ்சி குளக்கரை சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது.

 உடனே, போலீசார் போக்குவரத்தை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments