பேருந்து ஓட்டுநராக இருந்து, தொழிற்சங்கத் தலைவராக பதவி வகித்த மதுரோ, 1999இல் வெனிசுலாவின் அரசமைப்பு உறுப்பினராக தேர்வானார்.
ஐக்கிய சோசலிசக் கட்சி சார்பில் 2000இல் எம்பியாக தேர்வான பிறகு, அப்போதைய அதிபர் ஹூகோ சாவெஸ் உடன் நெருக்கம் ஆனார்.
2006 முதல் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய மதுரோவை, 2012இல் துணை அதிபராக நியமித்தார் அதிபர் சாவெஸ்.
2013இல் சாவெஸ் மறைவுக்குப் பிறகு அதிபராக பதவியேற்று, தற்போது வரை அப்பதவியில் தொடர்கிறார் மதுரோ.
2020இல் மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்திய அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் கொடுத்தது.
2025இல் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற ட்ரம்ப், மதுரோ சரணடைய வேண்டும் என எச்சரித்து வந்த நிலையில், இன்று வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்தி அவரையும் அவரது மனைவியையும் சிறைபிடித்துள்ளது.
0 Comments