Ticker

8/recent/ticker-posts

𝗣𝗟𝗘𝗔𝗦𝗘 𝗦𝗨𝗕𝗦𝗖𝗥𝗜𝗕𝗘 𝗢𝗨𝗥 𝗖𝗛𝗔𝗡𝗡𝗘𝗟

ஆயில் யுத்தம்

அமெரிக்கா வெனிசுவேலா அதிபாரை கிட்நாப் செய்ய என்ன காரணம் என எல்லாம் ரொம்ப குழம்பவேண்டியதே இல்லை. அதிபர் டிரம்ப் இன்று அளித்த பிரஸ்மீட்டில் "வெனிசுவேலாவின் ஆயில் இண்டஸ்ட்ரியை அமெரிக்க கம்பனிகள் தான் கட்டமைத்தன. அதை சாவேஸ் தேசியமயமாக்கிவிட்டார். 
அதனால் தான் படை எடுத்தோம். இனி இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு உண்டான இழப்பை அந்த ஆயிலை வைத்து தான் ஈடுகட்டுவோம். வெனிசுவேலாவின் பெட்ரோலிய துறையை மேம்படுத்த மக்களுக்கு எந்த சிரமமும் வேண்டாம். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என சொல்லிவிட்டார்

சில மாதங்களுக்கு முன்பு வெனிசுவேலாவின் அதிபருக்கு "நீங்களே சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு பிடித்த நாட்டில், கைநிறைய பணத்துடன் செட்டில் ஆக உதவுகிறோம்" என பேரம் பேசபட்டதையும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ பேட்டியில் சொன்னார்

மதுரோ இரு மனதுடன் இருந்ததாகவும், அதை அறிந்த சீன அதிபர் அதிரடியாக ஒரு தூதுகுழுவை மதுரோவிடம் அனுப்பியதாகவும் சொல்கிறார்கள். சீனா வெனிசுவேலாவின் பெட்ரோலிய கிணறுகளில் பெருத்த முதலீடு செய்துள்ளது. வெனிசுவெலா சீனாவுக்கு சுமார் 17,000 கோடி அமெரிக்க டாலர் கடன்பட்டுள்ளது. வெனிசுவேலாவின் பெட்ரோலிய துறையில் ஏராளமான சீன கம்பனிகள் முதலீடு செய்துள்ளன. ....இப்போது கூட சீன தூதுகுழுவினர் காரகஸில் இருப்பதாக தான் தகவல். இனி போட்ட முதலீட்டை எல்லாம் சுத்தமாக மறந்துவிடவேண்டியதுதான்

டாலருக்கு மாற்றாக யுவான் மற்றும் பிற கரன்சிகளில் வணிகம் செய்ய வெனிசுவேலாவுக்கும், ப்ரிக்ஸ் நாடுகளுக்கும் (இந்தியா, ரஷ்யா, பிரெசில், தென்னாப்பிரிக்கா) இடையே ஒப்பந்தம் உள்ளது.

இந்த சூழலில் அதிபர் மதுரோ இப்படி மிரட்டபடவும், அவர் குழம்பிய நிலையில் இருப்பதையும் அறிந்த சீன தூதுகுழுவினர் வெனிசுவெலா தலைநகர் காரகாஸில் இறங்கி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தகவல் அறிந்த டிரம்ப் உடனே இரவோடு இரவாக தாக்குதல் நட்த்த உத்தரவிட்டுவிட்டார்.

அதன்பின் என்ன நடந்தது என டிரம்ப் தன் பேட்டியில் சொல்கிறார்

"இரவு அதிபர் மாளிகையில் எங்கள் டெல்டா படை சென்று இறங்கியது. எதிர்தாக்குதல் மிக கடுமையாக இருந்தது. அவர்கள் தரப்பில் நிறைய உயிர்சேதம் ஏற்பட்டது. கடைசியாக மதுரோ அணுகுண்டு வெடித்தால் பதுங்கும் பங்கருக்கு செல்வதாக தகவல் கிடைக்க, பங்கரை நோக்கி டெல்டா படையினர் விரைந்தார்கள். மதுரோ உள்ளே நுழைந்து கதவை சாத்த முயல்கையில், பிடித்து விட்டார்கள்..."

மதுரோ 2024ம் ஆண்டு நடத்திய தேர்தலில் எதிர்கட்சியினர் தான் வெற்றிபெற்றார்கள் என ஐரோப்பிய நாடுகள் சொல்லி வந்தன. எதிர்கட்சியினர் பூத்ஸ்லிப்பை எண்ணி காட்டினால் பெரும்பான்மை வருகிறது. ஆனால் ரிசல்டில் ஆளும்கட்சி தான் ஜெயிக்கிறது. இப்படி ஜெயித்ததாக சொல்லப்பட்ட எதிர்கட்சியின் தலைவி (ஜெயித்தவர் இவர் அல்ல. இவர் தேர்தலில் நிற்க தடை)க்கு இந்த ஆண்டு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

அதனால் ஐரோப்பிய நாடுகளும், பிற உலகநாடுகளும் சத்தமே வெளியே வராமல் இருக்கிறார்கள். சீனா, ரஷ்யா, இரான், கியூபா மாதிரி நாடுகள் தான் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

"இனி வெனிசுவேலாவை நாங்கள் தான் ஆள்வோம்" என டிரம்ப் வெளிப்படையாக சொல்லியும் விட்டார். வெளியுறவுதுறை அமைச்சர் மார்கோ ரூபியோ, போர்துறை அமைச்சர் பீட்டர் ஹெக்செத் தலைமயிலான ஒரு அணி அதற்கு அமைக்கபட்டுள்ளது

'அடுத்து எந்த நாட்டின் மேல் நடவடிக்கை" என கேட்டதற்கு

"கொலம்பிய அதிபரை எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள். விரைவில் அவரது பின்புறம் காணாமல் போகும்.." என டிரம்ப் சொல்லியிருக்கிறார்

ஐ.நா சபை?

பொங்கல் வரை லீவாம்.

~ நியாண்டர் செல்வன்

Post a Comment

0 Comments