Ticker

8/recent/ticker-posts

ரயில் நிலையங்களில் தட்கல் முன்பதிவுக்கு இனி ஓடிபி கட்டாயம்.!


ரயில் நிலையங்களில் தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தில் கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி ரயில் நிலைய அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட்ட பின்னரே பயணச்சீட்டு உறுதி செய்யப்படும்.
உரிய பயணிகளுக்கு தட்கல் பயணச்சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

முன்னதாக, தட்கல் பயணச்சீட்டை இணைய வழியில் முன்பதிவு செய்ய ஆதாா் மூலம் ஓடிபி சரிபாா்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஐஆா்சிடிசி வலைதளம் அல்லது செயலியில் ஆதாா் இணைப்பை மேற்கொண்ட பயனா்கள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments