Ticker

8/recent/ticker-posts

பாஜக தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமனம்!

தேசிய செயல் தலைவராக இருந்த ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற குழு ஆலோசித்து நிதின் நபினை நியமித்துள்ளது.
நிதின் நபின் பாட்னாவில் பிறந்தவர். பிகாரின் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள நிதின் நபின், வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர்.

பிகார் அரசியலில் பாஜகவின் கூர்மையான வியூக வகுப்பாளராகவும் அறியப்படுகிறார். பான்கிபூர் நகரத் தொகுதியில் 2010, 2015, 2020 மற்றும் 2025 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும் நிதின் நபின் பொறுப்பு வகித்துள்ளார்.

Post a Comment

0 Comments